NATIONAL

நான்கு மாநிலங்களில் உள்ள வெள்ள நிவாரண மையங்களில் 7,054 பேர் அடைக்கலம்

ஷா ஆலம், டிச 26– இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கிளந்தான்,
திரங்கானு, பேராக் மற்றும் சரவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 7,054
பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

திரங்கானு மாநிலத்தில் வெள்ள நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து
அங்குள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை
1,438 ஆக குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 3,908 பேராக
இருந்தது.

பெசுட், கோல நெருஸ், கோல திரங்கானு, மாராங் ஆகிய மாவட்டங்களில்
12 துயர் துடைப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக தேசிய பேரிடர்
மேலாண்மை நிறுவனம் (நட்மா) தெரிவித்தது.

கிளந்தான் மாநிலத்தின் பாசீர் மாஸ் மற்றும் தும்பாட் மாவட்டங்களில்
உள்ள 18 துயர் துடைப்பு மையங்களில் 5,411 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

பேராக் மற்றும் சரவா ஆகிய மாநிலங்களைப் பொறுத்த வரை வெள்ள
நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. பேராக்கில் உள்ள ஒரு துயர்
துடைப்பு மையத்தில் 62 பேர் தங்கியுள்ள வேளையில் சரவா மாநிலத்தில்
செயல்படும் ஒரு நிவாரண மையத்தில் 141 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சண்டகானில் நேற்று ஏற்பட்ட கடல் பெருக்கைத் தொடர்ந்து
ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 1,362 பேர் நான்கு துயர் துடைப்பு
மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.


Pengarang :