SELANGOR

கிள்ளான், தாமான் கிளாங் ஜெயா காலைச் சந்தையில் எம்.பி.கே. சோதனை

கிள்ளான், டிச 27- இங்குள்ள கிளாங் ஜெயா காலைச் சந்தை பகுதியில்
ஒருங்கிணைந்த அமலாகச் சோதனை நடவடிக்கையைக் கிள்ளான்
நகராண்மைக் கழகம் அண்மையில் மேற்கொண்டது.

நகராண்மைக் கழகம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை வர்த்தகர்கள்
முறையாகப் பின்பற்றி நடப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த
சோதனை நடத்தப்பட்டதாகச் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின்
சுற்றுச்சூழல் துறை, அமலாக்கத் துறை, காலைச் சந்தை மற்றும் அங்காடி
லைசென்ஸ் துறை, வர்த்தக லைசென்ஸ் துறை கட்டிடத் துறை,
பொறியியல் துறை அதிகாரிகளோடு கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட்
மேனேஜ்மெண்ட் நிறுவன பொறுப்பாளர்களும் பங்கேற்றதாக அவர் தனது
பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட வர்த்தக விதிமுறைகளை வணிகர்கள் முறையாகப்
பின்பற்றுவதையும் வியாபார இடங்களில் தூய்மை
பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட
இந்த சோதனை நடவடிக்கையில் பங்கேற்ற அனைத்து தரப்பினருக்கும்
தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.


Pengarang :