HEALTHNATIONAL

கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை நேற்று 480ஆக குறைந்தது- நால்வர் மரணம்

ஷா ஆலம், டிச 27- நாட்டில் நேற்று கோவிட்-19 நோய்த் தொற்றினால்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 480ஆக குறைந்துள்ளது. கடந்த
ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 609ஆக பதிவாகியிருந்தது.

அவற்றில் 437 சம்பவங்கள் உள்நாட்டினரிடமும் ஏழு சம்பவங்கள்
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடமும் கண்டறியப்பட்டதாக கே.கே.எம்.
நாவ் அகப்பக்கம் கூறியது.

சிலாங்கூரில் மிக அதிகமாக அதாவது 119 சம்பவங்கள் பதிவாகின.
அதனைத் தொடர்ந்து பினாங்கு (46), கோலாலம்பூர் (44), சரவாக் (31), கெடா
மற்றும் பேராக் (26), மலாக்கா (22), ஜொகூர் (18), நெகிரி செம்பிலான் (15),
கிளந்தான் (12), புத்ரா ஜெயா மற்றும் சபா (11), பகாங் (7), திரங்கானு (4),
லபுவான் (2) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதனிடையே, கோவிட்-19 தொடர்புடைய நான்கு மரணச் சம்பவங்கள்
நேற்று பதிவாகின.

தற்போது கோவிட்-10 நோயாளிகளில் 885 பேர் மருத்துவமனைகளில்
சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 45 பேர் தீவிர சிகிச்சைப்
பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் 19 பேருக்கு செயற்கை சுவாசக்
கருவி பொருத்தப்பட்டுள்ளது.நேற்று மேலும் 655 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டனர்.


Pengarang :