ALAM SEKITAR & CUACANATIONAL

பேராக், கிளந்தான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை சீராகி வருகிறது

கோலாலம்பூர், டிச 28: பேராக், கிளந்தான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமை சீராகி வருகிறது, தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று பிற்பகலை விட இன்று குறைந்துள்ளது.

சபா மற்றும் திரங்கானுவில் தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று பிற்பகலில் பதிவு செய்யப்பட்ட புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது மாறவில்லை.

பேராக்கில், நேற்று இரவு 9 மணி நிலவரப்படி எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளந்தனில், பாசிர் மாஸில் உள்ள ஒரு தற்காலிகத் தங்கும் மையம் நேற்று இரவு மூடப்பட்ட வேளையில் இன்னும் இரண்டு மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

சரவாக்கில், செபுயாவில் உள்ள தற்காலிகத் தங்கும் மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 7 பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

திரங்கானுவில், பெசுட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேராக உள்ளது.

பெசுட் மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி (PA) கேப்டன் ரம்லான் ரோஸ் வாஹிட் இன்று பிற்பகல் பெர்னாமாவால் தொடர்பு கொண்டபோது, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட காலம்  தற்காலிகத் தங்கும் மையங்களில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அவர்களின் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

சபாவில், சண்டகனில் ஒரு தற்காலிகத் தங்கும் மையத்தில் (121 குடும்பங்களைச் சேர்ந்த 688 பேர்) பிதாஸில் 6 தற்காலிகத் தங்கும் மையங்களில் (177 குடும்பங்களைச் சேர்ந்த 766 பேர்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :