NATIONAL

ஆற்றில் மூழ்கி இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மரணம்

கோலாலம்பூர், டிச.31: தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், நேற்று மதியம் இங்குள்ள கோலா குபூ பாரு, பெரேடாக்கில் உள்ள சுங்கை சிலிங்கில் குளித்தபோது மூழ்கியதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் 21 வயதுடைய ஷேக் ரஹீம் கான் சலாவுதீன் மற்றும் முஹம்மது ஆரிஃப் ஹைகல் அஸான் என அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று காலை அவர்கள் மற்ற ஐந்து நண்பர்களுடன் குளிப்பதற்கும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காகவும் ஆற்றுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மதியம் 12 மணியளவில் தனது துறைக்கு அழைப்பு வந்ததாகவும், ஐந்து உறுப்பினர்கள் கோலா குபூ பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய இன்ஜினுடன் சுமார் 20 நிமிடங்களில் அந்த இடத்தைச் சென்றடைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ நோரஸாம் காமிஸ் கூறினார்.

“சம்ப இடத்திற்கு வந்தபோது, பாதிக்கப் பட்டவர்களில் ஒருவரை பொதுமக்கள் கரைக்குக் கொண்டு வந்து மீட்புக் குழுவினரால் சுவாச உதவி வழங்கப்பட்டது.

“இரண்டாவது நபர் சம்பவம் நடந்த பகுதியில் தேடுதல் நடத்திய பின்னர் மதியம் 12.45 மணியளவில் தீயணைப்பு துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டார்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோலா குபூ பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :