SELANGOR

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பயன்பாட்டில் இல்லாதப் பழையத் தளவாடப் பொருட்களை அகற்ற ரோல் ஆன் ரோல் ஆஃப் தொட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன – காஜாங் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், டிச 31: காஜாங் முனிசிபல் கவுன்சில் (MPKJ) சீனப் புத்தாண்டை முன்னிட்டு மொத்தக் கழிவுகளை அகற்றுவதற்காக 12 இடங்களில் ரோல் ஆன் ரோல் ஆஃப் (RORO) தொட்டிகளை வழங்குகிறது.

கார்ப்பரேட் திட்டமிடல் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு இயக்குனர் கமருல் இஸ்லான் சுலைமான் கூறுகையில், பழையத் தளவாடப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாதப் மின்சாதனங்களை குடியிருப்பாளர்கள் எளிதாக அப்புறப்படுத்த இந்நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

“இந்த திட்டம் நகராட்சி சேவை துறை மற்றும் காஜாங் முனிசிபல் கவுன்சில் சுகாதார துறையால் KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) உடன் இணைந்து அடுத்த ஆண்டு ஜனவரி 6 முதல் ஜனவரி 20 வரை சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

“எனவே, சுற்றுவட்டாரப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த வசதியை முடிந்தவரை சிறப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் வீசப்படும் கழிவுகள் பழைய தளவாடப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத மின்சாதனப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதைத் தவிர உணவு கழிவுகள் போன்றவற்றை வீசுவதை தவிர்த்தல் வேண்டும்.

 

தேதி மற்றும் இடங்கள்

ஜனவரி 6 முதல் 11 வரை

சுங்கை சுவா பாரு கிராம மண்டபம்

குவான் துங் பாரு கிராமச் சமூக மையம்

ஜாலான் ஆலம் ஜெய 11 தாமான் ஆலம் ஜெய, செராஸ்

ஜாலான் டயாங் 4/8 பண்டார் மஹ்கோத செராஸ்

 

ஜனவரி 12 முதல் 16 வரை

ஜாலான் டமாய் பெர்டானா 1/8 பண்டார் டமாய் பெர்டானா

ஜாலான் எஸ்எல் 7 பண்டார் சுங்கை லொங் (காவலர் குடில்)

ஜாலான் அவானா 15 தாமான் செராஸ் ஆவானா, செராஸ்

செமினி கம்போங் பாரு சந்தை

 

ஜனவரி 17 முதல் 20 வரை

ஜாலான் சூரியா 4 தாமான் சூரியா, காஜாங்

ஜாலான் புத்ரி ஜெய 11 தாமான் புத்ரி ஜெய, செராஸ்,

கம்போங் பாரு பத்து 11 பொது மண்டபம்

பலாய் ரயா கம்போங் பாரு தருண், ப்ரோகா


Pengarang :