பிரதமருடன் மந்திரி புசார் அமிருடின் ஷாரி இன்று சந்திப்பு

ஷா ஆலம், ஜன 3- சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இன்று புத்ராஜெயாவில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வெள்ளத் தடுப்புத் திட்டம் மற்றும் சாலை பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக அமிருடின் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் வாயிலாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமைத்துவத்தின் கீழ் கூட்டரசு அரசுக்கும் சிலாங்கூர் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற வேண்டும் என்ற மாநில மக்களின் அபிலாஷையை அந்த ஒரு மணி நேர சந்திப்பின் போது தாம் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது கடந்த 2022ஆம் ஆண்டில் மாநிலத்தின் வருமானம் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளத் தகவலையும் நான் பிரதமருடன் பகிர்ந்து கொண்டேன். 

கடந்தாண்டிற்கான நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கான 205 கோடி வெள்ளியையை விட 123.55 விழுக்காடு தாண்டி 253 கோடியே 28 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மாநிம் பெற்றுள்ளது என்றார் அவர்.

எதிர்காலத்தில் மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டிய முக்கிய கருத்துகளை பிரதமர் இச்சந்திப்பின்  பிரதமர் முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கூடிய விரைவில் மாநிலத்திற்கு பணி நிமித்த வருகை மேற்கொள்ளும்படி பிதமருக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமிருடின் சொன்னார்.


Pengarang :