NATIONAL

பத்தாங் காலி-கெந்திங் சாலை இன்று திறப்பு- கெந்திங் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி

கோலாலம்பூர், ஜன 6- நிலச்சரிவு காரணமாகக் கடந்த மாதம் 16ஆம் தேதி
முதல் மூடப்பட்டிருக்கும் பத்தாங் காலி-கெந்திங் சாலை இன்று மாலை
5.00 மணி முதல் அமலாக்கத் துறையினரின் கண்காணிப்பின் கீழ்
போக்குவரத்துக்குத் திறக்கப்படும்.

இந்த சாலையில் ஒரு தடம் மட்டுமே பயன்பாட்டிற்குத் திறந்து
விடப்பட்டுள்ள நிலையில் முதலாளிகளின் உறுதிக் கடிதத்தைக்
கொண்டுள்ள கெந்திங் ஹைலண்ட்ஸ் பகுதியில் வேலை செய்யும்
ஊழியர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும் என்று பொதுப்பணி
இலாகா அறிக்கை ஒன்றில் கூறியது.

கார், டாக்சி, பல்நோக்கு வாகனம் போன்ற முதல் பிரிவு வாகனங்களும்
மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் போன்ற ஆறாம் பிரிவு வாகனங்களும்
மட்டுமே இந்த சாலையைப் பயன்படுத்த முடியும் என அது தெரிவித்தது.

இந்த சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் நிலச்சரிவு ஏற்பட்ட
இடத்தில் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட
மாட்டர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு மலைச்சரிவுகளைக் கண்காணிக்கும் பணி தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வருவதால் அச்சாலையைப் பயன்டுத்தும்
வாகனமோட்டிகள் மிகுந்த கவனப் போக்கைக் கடைபிடிக்க வேண்டும்
என்பதோடு சாலையில் நிறுவப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளையும்
பின்பற்றி நடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக உலுயாம்-பத்துகேவ்ஸ் சாலை மற்றும்
கோலாலம்பூர்-ஈப்போ சாலையை வானமோட்டிகள் பயன்படுத்தலாம்
என்றும் அத்துறை ஆலோசனை கூறியது.


Pengarang :