SELANGOR

உணவு வியாபாரிகளுக்கு முகக்கவரி அணிய அறிவுறுத்தி ஒரு மாத அவகாசம் – எம்பிகேஎல்

கோலா லங்காட், ஜன 8: உணவு வியாபாரிகளுக்கு முகக்கவரி அணிய அறிவுறுத்தும் வகையில் கோலா லங்காட் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஎல்) ஒரு மாத அவகாசம் அளித்துள்ளது.

உணவு வணிகர்கள் அல்லது வியாபாரிகள் யாரேனும் முகக்கவரி அணிவதைக் கடைப்பிடிக்க தவறினால், எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிடுவோம் என்று டத்தோ அமிருல் அசிசான் அப்துல் ரஹீம் கூறியுள்ளார்.

“இதற்கு முன்பு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) அமல்படுத்திய போது சராசரி வர்த்தகர்கள் கூட மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வணிக உரிமத்தை நாங்கள் திரும்பப் பெற விரும்பவில்லை,“ என்றார்.

“உணவு வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்குவதன் மூலம் அவர்கள் கீழ்ப்படிவார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் இது அவர்களின் கடையின் நல்ல பெயரையும் தூய்மையையும் பராமரிக்கும்” என்று அவர் கூறினார்.

பண்டார் ரிம்பாயுவில் உள்ள ஜாலான் ஃப்ளோரா 2 இல் குறைந்த கார்பன் தினத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

உணவு கையாளுபவர் களிடையே முகக்கவரி பயன்படுத்தும் நடைமுறை மாநிலத்தின் உள்ளூர் அதிகாரிகளால் கட்டம் கட்டமாக செயல்படுத்த வேண்டும் என்று டத்தோ மந்திரி புசார் பரிந்துரைத்தார்.

உணவு தயாரித்தல் மற்றும் பரிமாறும் செயல்பாட்டின் போது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை நடைமுறை படுத்தப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :