SELANGOR

நேற்று முதல் சிலாங்கூர் தடுப்பூசி (செல்வேக்ஸ்) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, ஜன 8: நேற்று முதல் சிலாங்கூர் தடுப்பூசி (செல்வேக்ஸ்) திட்டத்தைத் தொடர, கோவிட்-19 தடுப்பூசியின் 200,000 டோஸ்களை மாநில அரசு தயார் படுத்தி வருகிறது.

அந்தத் எண்ணிக்கையானது, சமூகத்தைப் பாதுகாப்பதற்காக முன்னர் வாங்கப்பட்ட 600,000 டோஸ்களில் மீதமுள்ள ஒரு பகுதியாகும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“எங்களிடம் மீதம் 500,000 முதல் 600,000 டோஸ்கள் உள்ளன. இந்த முறை செல்வேக்ஸ் (Selvax) திட்டத்தின் வழி பொதுமக்களுக்கு 100,000 முதல் 200,000 வரை டோஸ்கள் வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன்,“ என்றார்.

நேற்று, சுகாதார எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மமுட் அவர்கள் செல்வேக்ஸ் திட்டத்தின் தொடர்ச்சியைப் பற்றி அறிவித்தார். 15 செல்வ்கேர் கிளினிக் (Selcare Clinic) மற்றும் தெ கேல் (THE KL) கிளினிக்கில் கோவிட்-19 தடுப்பூசி போடப்படுகிறது என்றார்.

இதற்கு நேரடியாகப் பதிவு செய்யலாம், ஆனால் 1-800-22-6600 என்ற எண்ணை அழைத்து முன் பதிவு செய்து கொள்ள பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையில், சீனச் சுற்றுலாப் பயணிகளால் கோவிட் -19 மீண்டும் பரவும் அபாயத்தைத் தவிர்ப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று அமிருடின் கூறினார்.

“எங்களிடம் ஏற்கனவே சில பரிந்துரைகள் உள்ளன, அவை இந்த புதன்கிழமை மாநில அரசு கூட்டத்தில் மேலும் ஆராயப்படும்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் நாட்டின் முக்கிய நுழைவாயில் என்பதால் சீன நாட்டு சுற்றுலாப் பயணிகளின் நுழைவுக்கான செயற்பாட்டு நடைமுறை (எஸ்ஓபி) குறித்து அமைச்சருடன் கலந்துரையாடப்படும் என்றார்.


Pengarang :