NATIONAL

போனஸ் திட்டத்தின் கீழ் ரொக்கப் பரிசு பெறுவதற்கான மின்னஞ்சலை மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அனுப்பவில்லை

கோலாலம்பூர், ஜன 8: தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் போனஸ் திட்டத்தின் கீழ் ரொக்கப் பரிசுகளைப் பெறுவதற்கு மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) எந்த ஒரு மின்னஞ்சலையோ அல்லது செய்தியையோ பொதுமக்களுக்கு அனுப்பவில்லை.

பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளால் எளிதில் ஏமாற வேண்டாம் என்றும், அதன் நம்பகத்தன்மை தீர்மானிக்கப் படாத மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் அடையாள அட்டை எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை வாங்குவதை தவிர்க்கவும் என மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

“மோசடி, தனிப்பட்ட தகவல் திருட்டு மற்றும் பிற வகையான குற்றங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதில் பொது மக்கள் எப்போதும் விழிப்புடன் இருப்பது முக்கியமானது” என்று அறிக்கை கூறுகிறது.

சைபர் இன்டெலிஜென்ஸ் மானிட்டரிங் நெட்வொர்க்கால் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் விளைவாக, அந்த மின்னஞ்சலால் பாதிக்கப்பட்டவர் இன்னும் பேங்குடன் தீர்க்கப்படாத பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளார், அதாவது டிஎம் குடும்ப பரிசு போனஸின் கீழ் RM270,000 ரொக்கப் பரிசு பெற்று இருப்பதாக அந்த  பொய்யான செய்தி கூறுகிறது.

“மேபேங்“ வங்கியுடன் பரிவர்த்தனை முறையின் வழி எப்பொழுதும் அச்சமின்றி பணத்தைக் கோரலாம் என்றும் அந்த மின்னஞ்சலின் உள்ளடக்கம் கூறுகிறது.

– பெர்னாமா


Pengarang :