SELANGOR

சிலாங்கூரில் இந்த ஆண்டு  சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

ஷா ஆலம், ஜன 8: சிலாங்கூரில் கடந்த ஆண்டு 3.3 மில்லியனாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 3.5 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை எக்ஸ்கோ தெரிவித்துள்ளது.

Splash Mania di Gamuda Cove கமுடா கோவ்  நீர் விளையாட்டு  தீம் பார்க் மற்றும்  போர்ட் கிள்ளான் குரூஸ் டெர்மினல் வழியாக உல்லாசப் பயணங்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக உள்ளன என்று ஹீ லோய் சியான் கூறினார்.

“கூடுதலாக, கோம்பாக்-உலு லங்காட் ஜியோ பார்க் போன்ற சுற்றுச்சூழல் சுற்றுலாப் பிரிவிலும் கவனம் செலுத்தப்படுகிறது, இது கோம்பாக்கில் உள்ள 20 ஜியோசைட்டுகள் மற்றும் உலு லங்காட்டில் உள்ள பத்து ஆராங், பத்து கேவ்ஸ் மற்றும் சிலாங்கூர் புரூட் வெளி போன்ற வேளாண் சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கியுள்ளது.

“சிலாங்கூரில் குடும்பம் மற்றும் நண்பர்களுடனான சுற்றுலா செல்ல பல சுவாரஸ்யமான இடங்கள் உள்ளன. இது நகர்ப்புறங்களுக்கு மட்டும் அல்ல,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மேலும் கூறுகையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளூர் சமூகத்தை அடிப்படையாகக்கொண்ட தொகுப்புகளும் பரவலாகச் சந்தைப் படுத்தப்படும் என்றார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2023 ஐ முன்வைக்கும் போது, டத்தோ மந்திரி புசார், மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக மொத்தம் RM6 மில்லியன் ஒதுக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, நாடு அளவில் ‘பூசிங் சிலாங்கூர் டூலு!’ மற்றும் சர்வதேச அளவில் ‘அற்புதமான சிலாங்கூர், என்னை எங்கும் அழைத்துச் செல்லுங்கள்’ என இரண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பிரச்சாரங்கள் செயல் படுத்தப்பட்டதாக விளக்கினார்.

மேலும், மெகா கன்வென்ஷன் குளோபல் டூரிஸம் சிலாங்கூர் 2023 தொடர்வதற்கு RM1 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


Pengarang :