SELANGOR

கோல்ஃப் கல்விக்கான சிறப்பு மானியத் திட்டத்தைச் சிலாங்கூர் அரசு உருவாக்கும்

பெட்டாலிங், ஜன 9 - வெளிநாடுகளில் கோல்ஃப் விளையாட்டு தொடர்பான படிப்பைத் தொடர விரும்பும் இளைஞர்களுக்கு உதவித்தொகையை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தகுதி உள்ள விளையாட்டாளர்களுக்கு 100,000 வெள்ளி வரை மானியம் வழங்கப்படும் 
என்று சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் கூறினார்.

கோல்ஃப் விளையாட்டில் சிலாங்கூர் மாநில இளைஞர்கள்  தங்கள் திறமைகளை 
வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கும் நோக்கில்  இந்த மானியம் வழங்கப்படுவதாக 
அவர் சொன்னார்.

வெளிநாட்டில் கோல்ஃப் தொடர்பான படிப்பைத் தொடர விரும்பும் இளம் வீரரகளுக்கு (சிலாங்கூர்வாசிகள்) மானியத்தை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இந்தச் சவாலை சிலாங்கூர் ஏற்றுக்கொள்கிறது. இதன் மூலம் நாட்டிற்குத் திறன் கொண்ட பல வீரர்களை உருவாக்க முடியும் என்று அவர் நேற்று ஸ்ரீ சிலாங்கூர் 
கோல்ஃப் கிளப்பில் 2023 சிலாங்கூர் சர்வதேச ஜூனியர் கோல்ஃப் சாம்பியன்ஷிப்பில் போட்டியில் சந்தித்தபோது கூறினார்.

இளம் வீரர்களுக்கு வெளிநாட்டில் படிப்பைத் தொடர மாநில அரசு சில குறிப்பிட்ட 
அளவுகோல்களை அமைக்கும் என்றும் ஹரீஸ் தெரிவித்தார்.

சிறந்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மாறாக 
இப்போட்டியில் பங்கேற்பதற்குரிய வீரர் வலிமை மற்றும் தகுதி கொண்டவராக இருக்க வேண்டும்  என்று அவர் கூறினார்.

ஜனவரி 5 முதல் ஜனவரி 8 வரை நடைபெற்ற இப்போட்டியில் 12 முதல் 18 
வயதுக்குட்பட்ட 105 பதின்ம வயது வீரர்கள் கலந்து கொண்டனர்.

Pengarang :