SELANGOR

அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளின் தூய்மையை மேம்படுத்த எண்ணம் கொண்டுள்ளது

ஷா ஆலம், ஜனவரி 9: அம்பாங் ஜெயாவை வாழத் தகுதியான நகரமாக மாற்றும் திட்டத்தில், அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள பகுதிகளின் தூய்மையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது.

கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாகக் குப்பைகளை வீசும் நபர்களுக்கு எதிராக உள்ளாட்சி அமைப்பு (பிபிடி) சமரசம் செய்து கொள்ளாது என வலியுறுத்தியது எம்பிஏஜே.

எரிவாயு நிலையங்கள், உணவுக் கடைகள், மசூதிகள் மற்றும் வழிபாட்டு இல்லங்கள் போன்ற இடங்களிலும் கழிப்பறை தூய்மைப் பிரச்சாரங்களை நடத்தவுள்ளது.

“தூய்மை என்பது அனைவரின் பொறுப்பு என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடத்தில் அதிகரிக்க, எரிவாயு நிலையங்கள், ஸ்டால்கள், வழிப்பாட்டு இல்லங்கள் மற்றும் மசூதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் இடையே தூய்மையைப் பாதுகாக்கும் போட்டியை அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் ஏற்பாடு செய்யவுள்ளது” என்று முகமட் ஃபௌசி முகமட் யாதிம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், அம்பாங் ஜெயாவைச் சுற்றியுள்ள காலி வீடுகள் அல்லது நிலங்களின் உரிமையாளர்கள், அறிவிப்பு நோட்டிஸ் வெளியிடப்பட்ட 14 நாட்களுக்குள் அவர்வர் வளாகங்களை சுத்தம் செய்யத் தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.


Pengarang :