SELANGOR

மதிப்பீட்டு வரியைச் செலுத்துவோர் அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லலாம்

ஷா ஆலம், ஜன. 9: அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) மதிப்பீட்டு வரியைச் செலுத்தியப் பிறகு அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் நான்கு மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகள் வெல்வதற்குப் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது.

அம்பாங் ஜெயா மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்குச் சரியான நேரத்தில் வரி செலுத்துவதில் உறுதியுடன் இருப்பவர்களைப் பாராட்டவே இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

“குறிப்பிட்ட காலத்திற்குள் மதிப்பீட்டு வரியைத் தொடர்ந்து செலுத்துவோரை பாராட்டுவதற்காக நடத்தப்படும் அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் மதிப்பீட்டு வரியின் அதிர்ஷ்ட குலுக்கு இந்த வருடமும் தொடரும்.

நான்கு ஹோண்டா வேரியோ 150 மோட்டார் சைக்கிள்கள், கார்மின் பிராண்ட் கைக்கடிகாரம் மற்றும் டைசன் வாக்யூம் கிளீனர் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சொத்து உரிமையாளர்கள் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரையிலான காலக்கட்டத்தில் முதல் தவணையும், ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் இரண்டாவது தவணை க்கு ஏற்ப மதிப்பீட்டு வரியைச் செலுத்த அறிவுறுத்தப்படுவதாக முகமட் ஃபௌசி கூறினார்.

இந்த ஆண்டு மதிப்பீட்டு வரி வசூல் மூலம் RM87.5 மில்லியன் வருவாயை ஈட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில். மேலும் மதிப்பீட்டு வரி நிலுவையில் உள்ள RM17 மில்லியனும் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலக்கட்டத்தில் தற்போதைய மதிப்பீட்டு வரி வசூல் கடைசியாக RM76.5 மில்லியனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியின் வசூலிப்பு RM 24.4 மில்லியனாக உள்ளது.


Pengarang :