SELANGOR

செலாயாங் மக்கள் புகார்கள் அளிப்பதற்கான பொது புகார் மேலாண்மை முறையை (SISPAA-MPS) பயன்படுத்தவும்

ஷா ஆலம், ஜனவரி 10: செலாயாங் நகர மக்கள் தங்களின் புகார்களைப் அளிப்பதற்கான பொது புகார் மேலாண்மை முறையை (SISPAA-MPS) பயன்படுத்தவும்.

முந்தைய STARS MPS முறைக்குப் பதிலாக SISPAA-MPS முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அம்முறை பொதுப் புகார்களை நிர்வகிக்க ஒரு ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“SISPAA-MPS இன் முக்கியப் பயன்பாடு பொது புகார்களை நிர்வகிப்பது ஆகும், அதாவது புகார்தாரர் களுக்குப் பதில்களை வழங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவது எளிமைப் படுத்துவதும் ஆகும்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

புதிய அமைப்பின் மூலம், https://mps.spab.gov.my இல் உள்ள SISPAA-MPS போர்ட்டலை நாடி பொதுமக்கள் புகார்கள் செய்யலாம், கேள்விகளைக் கேட்கலாம், பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கலாம் மற்றும் புகார்களுக்கான மதிப்பாய்வையும் பதிவு செய்யலாம்.

“SISPAA-MPS பயனர் முறைகளில் ஒன்று. பயனர் mps.spab.gov.my இணையதளத்திற்குச் சென்று புதிய புகார் அல்லது பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

“பயனர்கள் தகவல்களைப் பூர்த்தி செய்து புகார் ஆவணத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின் புகார் எண் வழங்கப்படும்,“என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 1800-222-677 / 03-6126 5831 என்ற எண்ணின் மூலம் பொது புகார் பிரிவு, எம்பிஎஸ் கார்ப்பரேட் துறையைத் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :