SELANGOR

சிலாங்கூர் விவசாய விழாவை “அக்ரோ ஃபெஸ்“ (SAF) இந்த ஆண்டும் பெரிய அளவில் நடத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது

ஷா ஆலம், ஜன 9: சிலாங்கூர்  விவசாய விழாவை (அக்ரோ ஃபெஸ்டை) (SAF) கடந்த 2019-ல் ஏற்பாடு செய்த பிறகு இந்த ஆண்டு மீண்டும் பெரிய அளவில் நடத்த மாநில அரசு உத்தேசித்துள்ளது.

பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஷா ஆலமில் உள்ள டத்தாரன் மெர்டேகாவில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாக விவசாய எஸ்கோ ஐ ஆர்  இஷாம் அசிம் தெரிவித்தார்.

விவசாய விழா  (அக்ரோ ஃபெஸ்ட்) மூலம் விவசாய தொழில் முனைவோர்   தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த பெரிய அளவில் ஒரு தளத்தை நாங்கள் வழங்குகிறோம்,“ என்றார்.

“சிலாங்கூர் விவசாய மாற்றத் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து விவசாய திட்டங்களின் விவரங்களுக்கும் இந்த பிப்ரவரியில் ஒரு விவாதத்தை நடத்துவோம்” என்று அவரை இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த தனது தரப்பு திட்டமிட்டுள்ளதாக இஷாம் கூறினார்.

இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் விவசாயத் துறையில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுவதை ஊக்குவிக்க முடியும் என்றும், இதனால் புதிய விவசாய குழுவை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

அக்ரோ ஃபெஸ்ட் ஆனது 2012 ஆம் ஆண்டு முதல் விவசாயத் துறையை மேம்படுத்த நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் விவசாய தொழில் முனைவோர்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஆண்டுதோறும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.


Pengarang :