SELANGOR

முகக்கவரி அணியாமல் உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு RM500 அபராதம்

ஷா ஆலம், ஜன 10: முகக்கவரி அணிவதைக் கடைப்பிடிக்கத் தவறும் சபாக் பெர்ணம் பகுதியில் உள்ள உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு RM500 அபராதம் விதிக்கப்படும்.

ஜனவரி 1 முதல் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் (PBT) முகக்கவரி அணியும் உத்தரவை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, சபாக் பெர்ணம் மாவட்டக் கவுன்சில் தனது (MDSB) முகநூலில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக சிலாங்கூரில் உள்ள அனைத்து உணவு மற்றும் பான வர்த்தகர்கள் முகக்கவரி அணிவதற்கான உத்தரவுக்கு இணங்க வேண்டும். “இணங்கத் தவறினால் RM500க்கு மேல் அபராதம் விதிக்கப்படும்” என்று உள்ளாட்சி அமைப்பு குறிப்பிட்டது.

மாநிலத்தில் உள்ள உணவு வியாபாரிகள் மற்றும் உணவகங்களை நடத்துபவர் களிடையே உணவுக் கையாளுதலில் சுகாதாரத்தை மேம்படுத்த முகக்கவரி அணிய வேண்டும் என்று கடந்த டிசம்பரில் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

இந்த அணுகுமுறை கோவிட்-19 பரவுவதை தவிர்ப்பதோடு, உணவு நச்சுத்தன்மையும் தவிர்த்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.


Pengarang :