NATIONAL

கோலா குபூ பாருவில் உள்ள மூன்று சுற்றுலா இடங்கள், நீரில் மூழ்கி இறப்பது மற்றும் தண்ணீரில் சிக்கிக் கொள்வது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி பதிவு செய்கின்றன

ஷா ஆலம், ஜன 11: உலு சிலாங்கூரில் உள்ள கோலா குபூ பாருவில் மூன்று சுற்றுலா இடங்கள், 2020 முதல் 2022 வரை நீரில் மூழ்கி இறப்பது மற்றும் தண்ணீரில் சிக்கிக் கொள்வது போன்ற நிகழ்வுகளை அடிக்கடி பதிவு செய்யும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகள் சுங்கை பத்தாங் காலி, சுங்கை சிலிங் மற்றும் சுங்கை பெர்தாக் என்று மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) சிலாங்கூர் இயக்குநர் டத்தோ நோராசாம் காமிஸ் கூறினார்.

பொதுவாக, அனைத்து நீர்நிலைகளிலும் நீரில் மூழ்கும் அபாயம் உண்டு; இருப்பினும் அவ்விடம் ஒரு (ஹாட்ஸ்பாட்) கவனத்தை ஈர்க்கும் இடமாக வகைப்படுத்தப் பட்டால், அந்த இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீரில் மூழ்கும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்

புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆறுகள், நீர்வீழ்ச்சிகள், காடுகள் மற்றும் அருவிகள் என 10 பொழுதுபோக்கு பகுதிகளை உள்ளடக்கிய சிலாங்கூரில் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மொத்தம் 15 இறப்பு சம்பவங்களும் ஆற்று நீரால் சிக்கிக்கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்றார்.

எனவே, ஆற்றின் அருகே சுற்றுலா அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்  பொதுமக்கள் கவனமாக இருக்கவும். அதிக நீர் இருப்பதற்கான அறிகுறிகளைக் கவனிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“நீங்கள் நீர்நிலையில் சிக்கியிருந்தால், மீட்புக் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது நீரின் அளவு குறையும் வரை காத்திருக்கவும், அந்த நேரத்தில் ஆற்றைக் கடக்க வேண்டாம்,” என பொதுமக்கள் கேட்டுகொள்ளப் படுகின்றனர்.

– பெர்னாமா


Pengarang :