SELANGOR

கே.டி.இ.பி.டபள்யு.எம்.- குளோத் கேர் ஒத்துழைப்பின் வழி 6,575 கிலோ பயன்படுத்தப்பட்ட துணிகள் சேகரிப்பு

ஷா ஆலம், ஜன 11- கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட்
(கே.டி.இ.பி.டபள்யு.எம்.) நிறுவனம் மற்றும் குளோத் கேர் இடையிலான
ஒத்துழைப்பின் வழி மொத்தம் 6,575.5 கிலோ பயன்படுத்தப்பட்ட துணிகள்
சேகரிக்கப்பட்டன.

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி மூன்று இடங்களில் வைக்கப்பட்ட
மூன்று மறுசுழற்சி தொட்டிகள் வாயிலாக பயன்படுத்தப்பட்ட சட்டைகள்,
கால்சட்டைகள், காலணி, கைப்பை, போர்வை உள்ளிட்ட துணை சார்ந்த
பொருள்கள் சேகரிக்கப்பட்டதாக அந்நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில்
கூறியது.

சைபர் ஜெயா மறுசுழற்றி மையத்தில் இரு தொட்டிகளும் ஷா ஆலம்
பேங்க் ராக்யாட் கட்டிடத்தில் ஒரு தொட்டியும் வைக்கப்பட்டதாக அது
தெரிவித்தது.

காகிதம், பிளாஸ்டிக், அலுமினியம் போன்ற பொருள்கள் மட்டுமின்றி
பழைய துணிகளையும் மறுசுழற்றி செய்வதற்குரிய விழிப்புணர்வு பொது
மக்கள் மத்தியில் ஏற்பட்டதன் விளைவாக இந்த இந்த திட்டம் அபரிமித
ஆதரவைப் பெற்றுள்ளது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Pengarang :