NATIONAL

திரங்கானு வெள்ளத்தினால் 3.8 கோடி வெள்ளி இழப்பு- போலீஸ் தகவல்

கோல திரங்கானு, ஜன 11- திரங்கானு மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட
வெள்ளத்தினால் 3 கோடியே 82 லட்சம் வெள்ளி மதிப்புள்ள
பொருள்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கடந்த திங்கள்கிழமை வரை பெறப்பட்ட
6,923 புகார்களின் அடிப்படையில் இந்த தொகை மதிப்பிடப்பட்டுள்ளதாக
திரங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ரோஹாய்மி முகமது ஈசா
கூறினார்.

பெசுட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் மிக அதிகமாக அதாவது
2,471 புகார்கள் கிடைக்கப்பெற்ற வேளையில் அதனைத் தொடர்ந்து உலு
திரங்கானு மாவட்டதில் 732 புகார்களும் கெமாமான் மாவட்டத்தில் 871
புகார்களும் டுங்குன் மாவட்டத்தில் 498 புகார்களும் கிடைக்கப்பெற்றதாக
அவர் தெரிவித்தார்.

இவை தவிர, செத்தியு மாவட்டத்தில் 454 புகார்களும் மாராங்
மாவட்டத்தில் 220 புகார்களும் கிடைக்கப்பெற்றன என்று இன்று இங்கு
வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இந்த வெள்ளப் பேரிடரில் காவல்
துறையின் 154 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டனர்
என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த வெள்ளம் காரணமாக காவல் துறை அதிகாரிகள் மற்றும்
உறுப்பினர்கள் 10 லட்சம் வெள்ளி இழப்பை எதிர்நோக்கியதாகவும்
மாவட்ட போலீஸ் தலைவர்கள் மூலம் அவர்களுக்கான உதவிகள்
பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


Pengarang :