HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 383 பேர் பாதிப்பு- நான்கு மரணங்கள் பதிவு

ஷா ஆலம், ஜன 13- நாட்டில் நேற்று 383 கோவிட்-19 நோய்த் தொற்று
சம்பவங்கள் பதிவாகின. நேற்றைய சம்பவங்களுடன் சேர்த்து இந்நோய்த்
தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 31
826 பேராக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி 11,126 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர
தாக்கத்தை எதிர்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ்
அகப்பக்கம் கூறியது.

சிலாங்கூரில் நேற்று 141 பேர் இந்நோய்த் தொற்றுக்கு ஆளான
வேளையில் கோலாலம்பூரில் 58 பேரும் சரவா மாநிலத்தில் 31 பேரும்
மலாக்காவில் 28 பேரும் பினாங்கில் 27 பேரும் கெடாவில் 17 பேரும்
பாதிக்கப்பட்டனர்.

மேலும், நெகிரி செம்பிலானில் 14 பேருக்கும் பேராக்கில் 13 பேருக்கும்
ஜோகூரில் 11 பேருக்கும் கிளந்தானில் 11 பேருக்கும் திரங்கானுவில் 10
பேருக்கும் புத்ரா ஜெயாவில் 8 பேருக்கும் சபாவில் 6 பேருக்கும்
லபுவானில் 4 பேருக்கும் பகாங் மற்றும் பெர்லிசில் தலா இருவருக்கும்
இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்புடைய நான்கு மரணச்
சம்பவங்கள் நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்த நோய்த்
தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 36,905ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 495 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் கிசிச்சைப்
பெற்று வரும் வேளையில் அவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :