SELANGOR

சீனப்புத்தாண்டை முன்னிட்டு சிலாங்கூர் பொது நூலகம் மூன்று நாட்களுக்கு மூடப்படும்

ஷா ஆலம், ஜன 18- சீனப்புத்தாண்டை முன்னிட்டு சிலாங்கூர் பொது
நூலகக் கழகத்தினால் நடத்தப்படும் அனைத்து நூலகங்களும் மூன்று
நாட்களுக்கு மூடப்படும்.

இம்மாதம் 22 முதல் 24ஆம் தேதி வரை அந்த நூலகங்கள் மூடப்படும்
வேளையில் வரும் 25ஆம் தேதி வழக்கம் போல் அவை செயல்படும்
என்று அக்கழகம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்தது.

மாநிலம் முழுவதும் மாவட்ட நூலகங்கள், சமூக நூலகங்கள், கிளை
நூலகங்கள் மற்றும் கிராம நூலகங்கள் உள்ளிட் 104 நூலக சேவை
மையங்களை சிலாங்கூர் பொது நூலகக் கழகம் கொண்டுள்ளது.


Pengarang :