NATIONAL

காவல்துறையினர் போல் நடித்து தப்பிக்க முயன்ற மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்

கோலாலம்பூர், ஜன. 17: வாகனச் சோதனையின் போது நேற்று ஷா ஆலம் விரைவுச்
சாலை (கேசாஸ்), சுபாங் ஜெயாவில் காவல்துறையினர் போல் நடித்து தப்பிக்க முயன்ற
மூன்று உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர், ஏசிபி வான் அஸ்லான் வான் மம்மத் கூறுகையில், இரவு 10.10  மணி அளவில் நடந்த இந்தச் சம்பவத்தில்,சந்தேகப்படும்படியான நிலையில் பெரோடுவா

மைவி ரக காரை   ஓட்டிச் சென்ற மூன்று சந்தேக நபர்களை  காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.
அவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட விசாரனையில்  சந்தேக நபர்களில் ஒருவர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி  என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்,  ஆனால் அந்த நபர் அங்கீகார அட்டையை ஆதாரமாக முன் வைக்கத் தவறி நிலையில், மேலும் விசாரணையில், பல்வேறு  காவல்துறையினர் உபகரணங்கள் அடங்கிய ஒரு கருப்பு பை கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் கூறியபடி, 18 முதல் 31 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும் குற்றவியல் சட்டப்
பிரிவு 170 மற்றும் 1967 காவல்துறை சட்டப் பிரிவு 89 இன் கீழ் விசாரணைக்காக இந்த
வெள்ளிக்கிழமை வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும்
குற்றம் நிரூபிக்கப் பட்டால் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

– பெர்னாமா


Pengarang :