SELANGOR

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டும் குற்றத்திற்காக 15 அபராதங்கள் வெளியிடப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஜன 18 : கிள்ளான் நகர மையத்தைச் சுற்றி உள்ள பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதாகக் கண்டறியப்பட்ட நபர்களுக்குக் கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (MPK) 15 அபராதங்கள் வெளியிட்டன.

பொறுப்பற்ற இச்செயல்கள் பெரும்பாலும் வெளி நாட்டினரால் இப்பகுதியில் நடப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“சிறு சட்டப் பிரிவு 4, கிள்ளான் முனிசிபல் கவுன்சில் குப்பைகளை சேகரித்தல், வீசுதல் மற்றும் அகற்றுதல் 2007 யின் கீழ் சிறு சிறு குப்பைகளை வீசும் குற்றத்துக்காகவும் அபராதம் விதிக்கப் பட்டது“ என முகநூல் மூலம் தெரிவிக்கப் பட்டது.

இதற்கிடையில், வீட்டுக் கழிவுகளை கொட்டும் குற்றத்துக்காகவும் தாமான் செந்தோசாவைச் சுற்றி நான்கு அபராதங்கள் வழங்கப்பட்டதாக எம்பிகே விளக்கியது.

இது பிரிவு 47(1)(a), சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 இன் அடிப்படையில் குப்பைகளைப் பொது இடங்களில் வீசுவது குற்றமாகும்.


Pengarang :