HEALTHNATIONAL

கோவிட்-19 எண்ணிக்கை நேற்று 350 ஆக உயர்வு- ஐவர் மரணம்

கோலாலம்பூர், ஜன 18- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை
நேற்று 350 ஆக உயர்வு கண்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை
227ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 33
ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் 10,327 பேர் இந்நோய்த் தொற்றின் தீவிர பாதிப்பை
எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம்
கூறியது.
சிலாங்கூரில் மிக அதிகமாக 128 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள
வேளையில் அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூரில் 81 பேரும்
ஜொகூரில் 20 பேரும் மலாக்கா மற்றும் பேராக்கில் தலா 19 பேரும்
சரவாவில் 18 பேரும் கெடாவில் 14 பேரும் திரங்கானுவில் 10 பேரும்
பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அதற்கு அடுத்த நிலையில் நெகிரி செம்பிலான் (8 பேர்), சபா (8 பேர்),
பினாங்கு (7 பேர்), கிளந்தான் மற்றும் பகாங் (5 பேர்), புத்ராஜெயா (4 பேர்),
பெர்லிஸ் (2 பேர்) லபுவான் (2 பேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய ஐந்து மரணச் சம்பவங்கள்
நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானவர்களின்
மொத்த எண்ணிக்கை 36,919 ஆக உயர்ந்துள்ளது.

Pengarang :