SELANGOR

சிறப்புக் குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பெறச் சிறப்பு தளம் – அனிஸ்

ஷா ஆலம், ஜன 19: சிலாங்கூர் சிறப்புக் குழந்தைகள் துறை (ANIS) சிறப்புக் குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பெற பெற்றோர்களுக்கு வசதியாக ஒரு சிறப்பு தளத்தை ஏற்பாடு செய்துள்ளது.

பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு எஸ்கோ டாக்டர் சிட்டி மரியா மஹ்மூத் கூறுகையில், பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவம் மற்றும் சிறப்புக் கல்வித் துறைகளில் அனுபவம் வாய்ந்த குழு பதிலளிக்கும்.

“ஏதேனும் கேள்விகள் இருந்தால், QR குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது www.anisselangor.com/tanyaanis என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் சிறப்புக் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அனிஸ் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு, ஐந்து முதல் ஆறு வயது கொண்ட சிறப்பு தேவையுடைய 80 மாணவர்கள் சிறப்புக் கல்வி வசதிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு மாநில அரசு இங்கு செக்க்ஷன் 7யில் பாலர் பள்ளி ஒன்றைக் கட்டியது.


Pengarang :