NATIONAL

தந்தையைக் கவசத்தொப்பியால் தாக்கியதாக மகன் மீது குற்றச்சாட்டு

மலாக்கா, ஜன. 19-  தனது தந்தையைக் கவசத் தொப்பியால் தாக்கியதாக இங்குள்ள ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில்  கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஆடவர் 
ஒருவர் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஜனவரி 12 ஆம் தேதி காலை 7 மணியளவில் ஜாலான் ஸ்ரீ இமாஸ் 15, தாமான் ஸ்ரீ டெலோக் இமாஸில் உள்ள ஒரு வீட்டில் தன் தந்தையான எஸ்.சந்திரன் (வயது58) 
என்பவரை தாக்கி காயப்படுத்தியதாக  27 வயதான சி கவியரசன் மீது குற்றம் 
சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 324 மற்றும் அதே சட்டத்தின்  கீழ் சேர்த்து வாசிக்கப்படும் 326ஏ பிரிவின்  கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.  குற்றம் 
நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது  இரண்டுமே விதிக்கப்படலாம்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை  ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி தர்மாஃபிக்ரி அபு ஆடாம்,  மாதத்திற்கு ஒருமுறை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்  என்பதோடு பாதிக்கப்பட்டவரை 
அணுகவும் கூடாது என உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் மறு விசாரணையை பிப்ரவரி 22ஆம்  தேதிக்கு ஒத்திவைக்க  
நீதிமன்றம் உத்தரவிட்டது.

Pengarang :