SELANGOR

வேளாண் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்க சமூக, நிறுவன பங்கேற்பு ஊக்குவிக்கப்படும்

ஷா ஆலம், ஜன 23- மாநிலத்தில் வேளாண் சுற்றுலாத் துறைக்கு
உத்வேகம் அளிக்க சமூக மற்றும் நிறுவன பங்கேற்பை டூரிசம் சிலாங்கூர்
ஊக்குவிக்கிறது.

சமூகம் சார்ந்த வேளாண் சுற்றுலா மூலம் மாநிலத்தின் பொருளாரத்திற்கு
புத்துயிரூட்டவும் சுற்றுப்பயணிகளுக்கு புதிய அனுபவம் கிடைப்பதற்குரிய
வாய்ப்பினை ஏற்படுத்தவும் இயலும் என்று டூரிசம் சிலாங்கூர் தலைமை
செயல்முறை அதிகாரிக அஸ்ருள் ஷா கூறினார்.

சமூகம் சார்ந்த சுற்றுலாத் திட்டத்தின் மூலம் புதிய வடிவிலான
சுற்றுலாவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப்பணிகளுக்கு
அறிமுகப்படுத்துவதன் வாயிலாக இத்துறையை தரம் உயர்த்த இயலும்
என்றார் அவர்.

அதோடு மட்டுமின்றி, மாநிலத்தின் பொருளாதாரத்தை குறிப்பாக சிறு
மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பும்
கிட்டும் என்று அவர் சொன்னார்.

சுங்கை பாஞ்சாங் ஆக்ரோ டூரிசம், கிசிஞ்சான் சுற்றுலா மேம்பாட்டுச்
சங்கம் மற்றும் டிங்கில் மாவட்ட மக்கள் நலச் சங்கம் ஆகிய பகுதிகளை
வேளாண் சுற்றுலா மையங்களாக மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பு
உள்ளதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் வேளாண் உருமாற்றத் திட்டத்தின் கீழ் வேளாண் சுற்றுலாவை
மேம்படுத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசு 2023ஆம் ஆண்டிற்கான வரவு
செலவுத் திட்டத்தில் 500,000 வெள்ளியை ஒதுக்கீ செய்திருந்தது.


Pengarang :