NATIONAL

கோத்தா திங்கி கடற்கரை தற்காலிகமாக மூடப்படுகிறது

ஜொகூர் பாரு, 23 ஜன.: நேற்று கடற்கரையில் ஒரு இளைஞன் நீரில் மூழ்கி இறந்த வேளையில் மற்றொருவரை காணவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோத்தா திங்கியில் உள்ள பத்து லயார் கடற்கரையைத் தற்காலிகமாக மூடுவதற்கான அறிவிப்பை பெங்கராங் நகராட்சி கவுன்சில் வெளியிட்டது.

இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், கடற்கரை நாளை வரை மூடப்படுவதாக வும் கோத்தா திங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் சுப்ட் ஹுசின் ஜமோரா தெரிவித்தார்.

இதற்கிடையில், காணாமல் போன 16 வயது இளைஞனைத் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை இன்று காலை 72 அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் (JBPM), மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மற்றும் குடிமைத் தற்காப்புப் படையினர் ஆகியோரால் தொடர்ப் பட்டுள்ளது.

“தேடல் தூரம் இரண்டு கிலோமீட்டர் உள்ளது மற்றும் பாதிக்கப் பட்டவரைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் 0.5 முதல் இரண்டு கடல் மைல்களுக்கு இடையில் காணவில்லை” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 5.21 மணிக்கு 0.3 மீட்டர் அளவுக்கு தண்ணீர் குறையும் என்று ஜேபிபிஎம் (JBPM) எதிர்பார்க்கிறது, எனவே பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பிரிவும் நீர் குறைந்து வரும் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடத்தப்படும் என்று ஹுசின் கூறினார்.

நேற்று மதியம் 1.25 மணியளவில் கடற்கரையில் குளித்த கொண்டிருந்த போது 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் காணாமல் போயிருந்தான்.

பாதிக்கப்பட்ட இருவரும் க்ளுவாங்கிலிருந்து மோட்டார் சைக்கிளில் மற்ற நான்கு நண்பர்களுடன் கடல்கரைக்கு வந்துள்ளனர்

– பெர்னாமா


Pengarang :