SELANGOR

அடுக்குமாடி வீடுகளின் பழைய படிக்கட்டு கைப்பிடிகளை மாற்ற RM5,000 ஒதுக்கீடு

ஷா ஆலம்,  ஜன 23: ரவாங் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (ADN) கடந்த வெள்ளிக்கிழமை அடுக்குமாடி வீடுகளின்  (flat) ரவாங்  பெர்டானா 5 (RP5) இல் உள்ள A புலோகில் உள்ள பழைய படிக்கட்டு கைப்பிடி களுக்கு பதிலாக புதிய கைப்பிடி கட்டினார்.

பிளாக்கில் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக படிக்கட்டு கைப்பிடிகள் மாற்றும் பணிக்காக RM5,000 தில் இந்த திட்டத்தை மேற்கொண்டதாகச் சுவா வெய் கியாட் கூறினார்.

“இந்த மாத தொடக்கத்தில் நான் புயல் பேரழிவைப் பார்வையிட்டபோது படிக்கட்டுகளின் கைப்பிடிகள் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்தேன், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காதபடி அவற்றை சரிசெய்ய முன்முயற்சி எடுத்தேன்.

“இதுவரை நாங்கள் ஏ பிளாக்கை மட்டுமே சரிசெய்து வருகிறோம், தற்போதுள்ள நிர்வாகம் செயல்படாததால், குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் உள்ளது,” இது குறித்து கட்டிட ஆணையரிடம் (சிஓபி) பேச்சுவார்த்தை  நடத்துவோம், என்று அவர் கூறினார்.

புதிய நிர்வாகத்தின் மூலம், எந்தவொரு பிரச்சினையையும் விரைவாகத் தீர்க்க குடியிருப்பாளர்களுக்கு உதவ முடியும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, வெய் கியாட், செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங்குடன் சேர்ந்து, ரவாங்கில் உள்ள தாமான் பெர்சத்து பாலத்தின் கூரையில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய RM30,000 ஒதுக்கீடு செய்தார்.

தினமும் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்புக்காக தனது சொந்த ஒதுக்கீட்டில் இந்த முயற்சி எடுக்கப் பட்டதாக அவர் விளக்கினார்.


Pengarang :