ALAM SEKITAR & CUACANATIONAL

இன்று முதல் புதன்கிழமை வரை திரங்கானு, பகாங், ஜொகூர், சரவாக் மற்றும் சபாவில் தொடர் மழை

கோலாலம்பூர், ஜன 23: திரங்கானு, பகாங், ஜொகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் புதன்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்றிரவு 12.05 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மெட்மலேசியா திரங்கானுவில் டுங்குன், கெமாமன் மற்றும் பஹாங்கில் குவாந்தன், பெக்கான், ரோம்பின் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று கணித்துள்ளது

கூடுதலாக, ஜொகூரில் செகாமட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜொகூர் பாரு ஆகிய இடங்களிலும் இதே வானிலையை மெட்மலேசியா எதிர்பார்க்கிறது.

மேலும், சரவாக் மற்றும் சபாவிலும் பல பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :