SELANGOR

இன்று முதல் சென்ட்ரல் ஐ-சிட்டி மாலில் ரியல் எஸ்டேட் கண்காட்சி

ஷா ஆலம், ஜன 23: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) இன்று முதல் சென்ட்ரல் ஐ-சிட்டி மாலில் ரியல் எஸ்டேட் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது.

ஜனவரி 29 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் பல்வேறு வகையான குடியிருப்புகள் மற்றும் வணிக அலகுகள் நியாயமான விலையில் விளம்பரப்படுத்தப்படும் என்று மாநில அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“உங்கள் கனவு சொத்து பற்றிய பல்வேறு தகவல்களை பெறுங்கள். சுவாரசியமான தள்ளுபடிகள் மற்றும் விளம்பரங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு, PKNS ரியல் எஸ்டேட் ஆலோசகரை 03-5022 0189 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது http://www.wasap.my/60109280187 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும் www.pkns.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


Pengarang :