SELANGOR

திடக்கழிவு மறுசுழற்சி ஆலை அனுமதியின்றி இயங்குவதால் மூட உத்தரவு – கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், ஜன 23: கோலா சிலாங்கூர், ஜாலான் அப்துல் அஜிஸ், ஈஜோக்கில் உள்ள திடக்கழிவு மறுசுழற்சி ஆலை அனுமதியின்றி இயங்குவது கண்டறியப்பட்டதால் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.

கோலா சிலாங்கூர் முனிசிபல் கவுன்சிலுக்குச் (MPKS) சுற்றுப்புற பகுதியில் உள்ள நாற்றம் குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததன் விளைவாக, சுற்றுச்சூழல் துறை (DOE) காவல்துறையுடன் இணைந்து ஜனவரி 19 அன்று சோதனை நடவடிக்கையை மேற் கொண்டதாகத் தெரிவித்தது.

ஆய்வு செய்தபோது, அந்த வளாகத்தில் ‘மெட்டல் ட்ராஸ்’, உலர் பேட்டரி கழிவுகள், ‘பிளாஸ்டிக் சர்க்யூட் போர்டு’ மற்றும் ‘கோப்பர் ஸ்கிராப்’ போன்ற திடக் கழிவுகள் சேமித்து பதப்படுத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்பட்டது.

“எனவே, இந்த தொழிற்சாலையை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது மற்றும் உரிமம் இல்லாத குற்றத்தின் காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டது” என்று எம்பிகேஎஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகாரிகளிடமிருந்து உரிமம் பெறாமல் வணிகம் செய்ததற்கான வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிம விதிகள் (கோலா சிலாங்கூர் மாவட்ட கவுன்சில்) 20 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக எம்பி கே எஸ் தெரிவித்துள்ளது.

சாலைகள், வடிகால் மற்றும் கட்டிடங்கள் சட்டம் 1974 (சட்டம் 133) பிரிவு 70 (1) இன் கீழ் அங்கீகரிக்கப்படாத கட்டிடத்தின் கட்டமைப்பு தவறுக்கு எதிராக கட்டிடத் திட்டம் மற்றும் அபராதத்தை செலுத்த உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டது.


Pengarang :