SELANGOR

பொது இடங்களில் குப்பைகளை வீசிய அந்நிய நாட்டினருக்கு 53 குற்றப்பதிவுகள்- எம்.பி.கே. வழங்கியது

ஷா ஆலம், ஜன 25- இம்மாதம் 22ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு
சோதனை நடவடிக்கையில் குப்பைகளைப் பொது இடங்களில் வீசிய 53
அந்நிய நாட்டினருக்குக் கிள்ளான் நகராண்மைக் கழகம் 53 குற்றப்பதிவுகளை
வழங்கியது.

கிள்ளான், ஜாலான் பாரு மற்றும் ஜாலான் போஸ் பாருவில்
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இப்பொறுப்பற்றச் செயலைப்
புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நகரை அசுத்தப்படுத்தும் தரப்பினருக்கு எதிரான இந்த சோதனை
நடவடிக்கையில் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் ஆறு உறுப்பினர்கள்
பங்கேற்றதாக நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

சிகிரெட் துண்டுகள், காகிதங்கள், குளிர்பான டின்கள், காலி போத்தல்களைப்
பொது இடங்களில் வீசிய குற்றத்திற்காக அந்நிய நாட்டினருக்கு 53
குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் 2007ஆம் ஆண்டு குப்பை சேகரித்தால்
மற்றும் அழித்தல் துணைச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் இந்நடவடிக்கை
எடுக்கப்பட்டது.


Pengarang :