HEALTHNATIONAL

101 புதிய கோவிட்-19 இன் சம்பவங்கள் பதிவாகியுள்ளன

ஷா ஆலம், ஜன 25: 101 புதிய கோவிட்-19 இன் சம்பவங்கள் நேற்று பதிவாகியுள்ளது, அவற்றில் ஒன்று அந்நிய நாட்டினரால் ஏற்பட்ட சம்பவம் ஆகும். மொத்த கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 5,035,073 ஆக உள்ளது.

“KKM Now“ போர்ட்டலில் உள்ள மலேசியச் சுகாதார அமைச்சகத்தின் (KKM) தரவுகளின் அடிப்படையில், செவ்வாயன்று இறப்புகள் எதுவும் பதிவு செய்யப் படவில்லை.

மலேசியாவில் கோவிட்-19 காரணமாக இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,932 ஆக உள்ளது என்று சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன, இதனால் நாட்டில் தொற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,988,143 ஆக உள்ளது.

இதற்கிடையில், கோவிட் -19 இன் தற்போதைய சம்பவங்கள் 9,998 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன, அவர்களில் 9,635 அல்லது 96.4 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஆவர்.

கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்தில் (PKRC) எந்த நோயாளிகளும் வைக்கப்படவில்லை, அதே நேரத்தில் 351 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளனர்.


Pengarang :