SELANGOR

சுங்கை வே பல்நோக்கு மண்டபம் வரலாற்றுக் காட்சியகமாக மாறியது

பெட்டாலிங் ஜெயா, ஜன 25: இங்குள்ள சுங்கை வே பல்நோக்கு மண்டபத்தில் உள்ள நிலத்தடி வாகன நிறுத்துமிடம் அசுத்தமாகவும் கைவிடப் பட்டதாகவும் மட்டுமின்றி, அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கியது.

அப்படி நிர்வாகமற்ற இருந்த பகுதி, தற்போது ஒரு வரலாற்றுக் காட்சியகமாக மாறியுள்ளது. இது கம்போங் பாரு சுங்கை வேயில் வசிப்பவர்களுக்கு பெருமையாக மாறியுள்ளது.

கம்போங் பாரு சுங்கைவே யின் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டில் அதன் உருமாற்றத்தை மேற்கொள்வதற்கான உத்வேகம் தூண்டப் பட்டது என்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் (ADN) கூறினார்.

“கடந்த காலங்களில், இந்த வாகன நிறுத்துமிடம் கைவிடப்பட்டு இருந்ததால் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் இப்போது கம்போங் பாரு சுங்கை வேய் பல்நோக்கு மண்டபத்தை வரலாற்று நடைபாதையாக மாற்றியுள்ளோம்.

“குடியிருப்பு மக்களும் பொதுமக்களும் கம்போங் பாருவின் வளர்ச்சியை பார்த்து, அதன் புதுப்பித்தலில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்தக் காட்சியகத்தில் 200க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் காட்சிப்படுத்த பட்டதாகவும், அவற்றில் 80 சதவீதம் கிராம மக்கள் நன்கொடையாக அளித்ததாகவும் யி வெய் கூறினார்.

அவரது கூற்றுப்படி, பெட்டாலிங் ஜெயா சிட்டி கவுன்சிலின் (MBPJ) RM26,000 மதிப்புள்ள மானியம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்கொடை உட்பட, வரலாற்று நடைபாதையைப் புதுப்பித்து அழகு படுத்துவதற்கான மொத்த செலவு கிட்டத்தட்ட RM100,000 ஆகும்.

“இந்த இடம் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும் மற்றும் நுழைவு இலவசம்” என்று அவர் கூறினார்.


Pengarang :