SELANGOR

மறுசுழற்சி பொருட்களைப் பணமாக மாற்ற ஓர் அரிய வாய்ப்பு

ஷா ஆலம், ஜன 25: இந்த சனிக்கிழமை அன்று பெட்டாலிங் ஜெயாவின் லெக் செங் கோபிடியம் செக்சியன் 19 இல் நடைபெறும் ‘பணத்திற்கான குப்பை’ திட்டத்தில் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களைப் பணமாக மாற்றும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN), ராஜீவ் ரிஷ்யகரன் கூறுகையில், மக்கள் இரும்பு, காகிதம் அல்லது கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு வகையான மறுசுழற்சி பொருட்கள் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

“அவர்களின் பொருட்கள் முதலில் எடை போடப்பட்டு விலை நிர்ணயிக்கப்படும்.

“உங்களுக்குப் பணமாக மாற்றுவதற்கு காகிதம், செய்தித்தாள், உலோகம் அல்லது கண்ணாடி பாட்டில்கள் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய எந்த உலர்ந்த பொருள்களையும் கொண்டு வாருங்கள்,” என்று அவரை இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

ராஜீவின் கூற்றுப்படி, புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்ற சமூகச் சேவை மையம் “ட்ராஷ்சைக்கிள் மலேசியா“ நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்.

மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தால் இந்த திட்டத்தை அவ்வப்போது செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம், என்றார்.


Pengarang :