NATIONAL

சண்டகான் அருகே படகு கவிழ்ந்தது- ஏழு இராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்பு

சண்டகான் ஜன 26 – இங்குள்ள   புலாவ் நுனுயான் அருகே இரணுவ ரோந்துப் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த  இரண்டாவது கூட்டுப் பணிக்குழு தலைமையகத்தைச் சேர்ந்த ஏழு ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டனர்.

நேற்று காலை 10.00  மணியளவில் அவர்களின் ரோந்து படகு பெரிய அலைகளால் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகச் சபா மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லாவின் கூறினார்.

நேற்று ஜனவரி 25ஆம் தேதி ஏறக்குறைய காலை 10.00 மணியளவில், ஏ.டி.பி. 2  வைப்பர் 7 ரோந்துப் படகு ஏழு இராணுவ வீரர்களுடன் பூலாவ் பாக்குங்கானில் இருந்து சண்டகான்,  பூலாவ் பக்குங்கான் கிச்சிலில் உள்ள ஏ.டி.பி. 2 தலைமையகத்தின் படகுத் துறைக்கு    எரிபொருள் நிரப்புவதற்கும்  தளவாடங்கள் பெறுவதற்கும்   புறப்பட்டுச் சென்றது. இருப்பினும், சுமார் 11.00 மணியளவில் ரோந்துப் படகு புலாவ் நுனுயான் கடல் அருகே வந்தபோது  அது பெரிய அலைகளால் தாக்கப்பட்டு கவிழ்ந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அனைத்து பணியாளர்களும் நேற்று மதியம் 2.50 மணியளவில், பொது நடவடிக்கைப் படையின் (ஜி.ஓ.எஃப்.) 15வது பட்டாளத்தின் ரோந்துப் படகு மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காகச் சண்டகான் கடல் போலீஸ் படை  செயல்பாட்டுத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இட்ரிஸ் கூறினார்.


Pengarang :