NATIONAL

புதர் நிறைந்த பகுதியில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

மாராங், ஜன 26 : கடந்த வியாழன் அன்று வகாஃப் தபாய் செல்லும் கம்போங் அலோர் காலி சாலை ஓரத்தில் ஒரு புதர் நிறைந்த பகுதியில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஓய்வூதியம் பெற்ற ஒருவர் இன்று முதல் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.

59 வயதுடைய அந்நபரை விளக்கமறியலில் வைக்க மாஜிஸ்திரேட் சூர் அசூரீன் சைனல்கிவ்லி (Zur Azureen Zainalkefli) உத்தரவு பிறப்பித்தார் மற்றும் குற்றவியல் சட்டப்பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது.

சந்தேக நபர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஜெலி, கிளந்தானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசியப் பதிவுத் துறை மற்றும் மலேசிய மற்றும் சிங்கப்பூர் குற்றப் பதிவு மையம் (டி2) மூலம் பொருந்திய கைரேகைப் பதிவு களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர் ஜரீனா முக்தார் (57) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மராங் மாவட்டக் காவல்துறை தலைவர் டிஎஸ்பி முகமது ஜைன் மாட் ட்ரிஸ் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காயங்கள் ஏதுமின்றி சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது டன், சம்பவ இடத்தில் போராட்டத்திற்கான அறிகுறிகள் இரத்தக் கறைகளோ ஏதும் காணப்படவில்லை.

– பெர்னாமா


Pengarang :