SELANGOR

இன்று நடைபெற உள்ள மாநில அளவிலான சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்

ஷா ஆலம், ஜன 28: ஷா ஆலம் ட;த்தாரன் மெர்டேகாவில் இன்று நடைபெற உள்ள சீனப்
புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பைக் கண்டு மகிழ டத்தோ மந்திரி புசார்
பொதுமக்களை அழைக்கிறார்.

கலாச்சார நிகழ்ச்சிகள், பஜார் மற்றும் இரவு உணவு போன்ற பல்வேறு சுவாரஸ்யமான
நடவடிக்கைகள் உள்ளடக்கிய இந்நிகழ்வு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10.30 மணி
வரை நடைபெறவுள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநில அளவிலான சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் ஜனவரி 28
(சனிக்கிழமை) மாலை 3.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஷா ஆலம் டதாரன்
மெர்டேகாவில் நடைபெறும். வாருங்கள், அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள
அழைக்கப்படுகிறீர்கள்  என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்தார்.

ஜனவரி 16 அன்று, தொழில் மற்றும் வர்த்தக எஸ்கோ டத்தோ டெங் சாங் கிம் கொண்டாட்டத்தின்

போது 10,000 விருந்தினர்கள் கலந்து கொள்வதை  இலக்காக கொண்டுள்ளது என்றார்.

“Musim bunga kembali ke khatulistiwa“ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு
இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு RM10,000 மதிப்புடைய அங்பாவ்
வழங்கப்படவுள்ளது. மேலும், RM3,000 மதிப்புள்ள மின் சாதனப் பொருட்களும்
அதிர்ஷ்ட குழுக்கு வழி வழங்கப்படும்.


Pengarang :