NATIONAL

RM6 மில்லியன் மதிப்புள்ள போதை பொருட்கள் விநியோகித்ததாகச் சந்தேக நபர் கைது

செர்டாங், பிப் 2: ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் RM6.36 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைபொருள்களை விநியோகித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செர்டாங் மாவட்ட காவல்துறை தலைமை உதவி ஆணையர் ஏ.ஏ.அன்பழகன் கூறுகையில், சோதனையில் மெத்திலினெடிஆக்சி-மெத்தாம்பேட்டமைன் (123 கிலோ), சாபு (0.5 கிலோ), போதைப்பொருள் அடங்கிய 18 பாட்டில்கள் (301 கிராம்), எக்ஸ்டசி மாத்திரைகள் (21 கிராம்) கஞ்சா (13.8 கிராம்) மற்றும் மூன்று போதைபொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இன்று செர்டாங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், “பிடிபட்ட போதைப்பொருள்கள் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள சந்தைக்காக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

ரிங்கிட் 10,000 பணமும் இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவர் கூறியபடி, சந்தேக நபர் அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக அந்த தொழில்சாலையை வேறொரு நிறுவனத்தின் பெயரில் வாடகைக்கு எடுத்துள்ளார்.

சந்தேக நபர் கடந்த ஆண்டு முதல் போதைப்பொருள் விற்பனை செய்வதல், போதைப்பொருள் பதப்படுத்துதல் மற்றும் ‘ரன்னர்’ என சந்தேகிக்கப் படுவதாகவும் அன்பழகன் கூறினார்.

சம்பந்தப்பட்ட நபர், வாரத்திற்கு RM10,000 முதல் RM15,000 வரை இதன் மூலம் வருமானம் பெறுவதாக நம்பப்படுகிறது என்றார்.

“சந்தேக நபரின் மற்ற நண்பர்கள் இந்த சிண்டிகேட்டை இயக்க இன்னும் சுதந்திரமாக இருப்பதாகக் காவல்துறையினர் நம்புகிறார்கள்,” என்று அவர் கூறினார், ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39b இன் கீழ் சந்தேக நபர் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

– பெர்னாமா


Pengarang :