SELANGOR

2,000 பயனர்கள் கோ சிலாங்கூர்  சுற்றுலா செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்

ஷா ஆலம், பிப் 2: மாநிலத்தில் உள்ள சுவாரஸ்யமான இடங்களைப் பற்றிய பல்வேறு தகவல்களை பெற, கிட்டத்தட்ட 2,000 பயனர்கள கோ சிலாங்கூர்  சுற்றுலா செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பயனர்களும் நேர்மறையான கருத்துக்களை வழங்கினர், மேலும் சலுகை தொகுப்புகளைப் பன்முகப்படுத்துதல் போன்ற சில மேம்பாடுகளையும் பரிந்துரைத்தனர் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“ஆஃபர் பேக்கேஜ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற முன்னேற்றத்திற்கான பல பரிந்துரைகள் உள்ளன. நிச்சயமாக, பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக இந்த விஷயம் சம்பந்தப்பட்ட தரப்பினரால் பரிசீலிக்கப்படும்” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பல்வேறு சுவாரசியமான இடங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக கோ சிலாங்கூர் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அமிருடின், சிலாங்கூர் வருகையாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

“இந்த சுற்றுலா செயலி அனைவரின் விடுமுறைக்கும் அர்த்தத்தைத் தருவதை உறுதி செய்ய மாநில அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்,” என்று அவர் கூறினார்.

கோ சிலாங்கூர் செயலி உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றை முன்பதிவு செய்ய உதவுகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த செயலி, உள்ளூர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான டூர்ப்ளஸ் டெக்னாலஜியுடன் இணைந்து சிலாங்கூர் சுற்றுலாவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சிகளில் ஒன்றாக RM3 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டது.


Pengarang :