NATIONAL

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஜொகூரில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், பிப் 3: சபாவில் உள்ள தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ள அதே வேளையில் ஜொகூரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இன்று காலை வரை எந்தவொரு மாற்றமும் இல்லை.

சபா மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செயலகம் ஓர் அறிக்கையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 165 குடும்பங்களைச் சேர்ந்த 535 பேராக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்பது தற்காலிகத் தங்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பியூஃபோர்ட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பிற மாவட்டங்களில் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஜொகூரில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, 264 குடும்பங்களைச் சேர்ந்த 925 பேர் எட்டு பிபிஎஸ் மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஜொகூர் ஜேபிபிஎன் அறிக்கையின்படி, 249 குடும்பங்களைச் சேர்ந்த 877 பேர் பத்து பஹாட்டில் உள்ளனர். மேலும், செகாமட்டில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் உள்ளனர்.

இதற்கிடையில், இரு மாவட்டங்களிலும் காலை 8 மணி நிலவரப்படி வானிலை பிரகாசமாக இருந்தது, ஆனால் பத்து பஹாட்டில் உள்ள சுங்கை பெக்கோக்கின் நீர் மட்டம் இன்னும் 18.80 மீட்டர் அளவோடு அபாய அளவை தாண்டி உள்ளதாக தரவு காட்டுகிறது.

– பெர்னாமா


Pengarang :