NATIONAL

மது கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேக நபர் கைது

கோலாலம்பூர், பிப். 5: செரசில் மது கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர் ஒருவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

செராஸ் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி ஜாம் ஹலிம் ஜமாலுடின் கூறுகையில், 47 வயதுடைய அந்நபர் கம்போங் போஹோல், புக்கிட் ஜலீலில் மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு பிராண்டுகளின் 3,694 மதுபாட்டில்கள் மற்றும் 4,920 மதுபான டின்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரிம 270,000 என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135(1)(d) மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 15(1)(c) ஆகியவற்றின் கீழ் சந்தேக நபர் பிப்ரவரி 15 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றார்.

– பெர்னாமா


Pengarang :