NATIONALSELANGOR

சுங்கை துவா மாநிலச் சட்ட மன்ற தொகுதி மக்களுக்கு ஆபத்து அவசர வேளையில் இலவச போக்குவரத்து சேவை

கோம்பாக், பிப் 5: சுங்கை துவா மாநில சட்டமன்றத்தில் வசிப்பவர்களுக்கு இரயில் நிலையங்கள், அரசு நிர்வாக அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை களுக்குச் செல்ல இலவச மினி போக்குவரத்து சேவையை வழங்குவதாக டத்தோ மந்திரி புசார் நேற்று அறிவித்தார்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்த தனது கட்சி மினி பேருந்துகள், வேன்கள் போன்ற பல வாகனங்களைச் சேகரித்து வருவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைப் பயன்படுத்த நாங்கள் பாடுபடுவோம், ”என்று அவர் அங்குள்ள தாமான் ரெயின்ட்ரீ, பத்து கேவ்சில் புதிய ரெயின்ட்ரீ சாலையின் திறப்பு விழாவில் உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.

“இந்த மினி வாகனச் சேவை செலாயாங் நகராட்சி கழகம், மாவட்ட மற்றும் நில அலுவலகங்கள், சுகாதார மையங்கள் போன்ற பல முக்கிய நிர்வாக மையங்களுடன் உறவை வலுப்படுத்தும்

இந்த மினி வாகனச் சேவை சிலாங்கூர் ஸ்மார்ட் பேருந்து பயன்படுத்தும் பிரதான பாதையில் செல்வது மட்டுமின்றி, பொதுப் பேருந்து சேவை இல்லாதப் பகுதிகளுக்குச் செல்லும் என அமிருடின் மேலும் தெரிவித்தார்.


Pengarang :