NATIONAL

ஜொகூர் சுல்தான் பிரதமர் இல்லத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை

ஜொகூர் பாரு, பிப் 5: ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மார்க்கும் சுல்தான் இஸ்கன்டார் அவர்கள் நேற்று புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானாவில் உள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வருகை புரிந்தார்.

இச்செய்தி சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் சில புகைப்படங்களோடு பதிவேற்றம் செய்யப்பட்டது எனச் சமூக ஊடகத் தளத்தில் பகிரப்பட்டுள்ளன.

10வது பிரதமரின் அழைப்பை நிறைவேற்றவே இந்த வருகை என்றும் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது அன்வர் கடந்த திங்கட்கிழமை (ஜனவரி 30) அன்று சிங்கப்பூருக்குத் தான் மேற்கொண்ட பணி பயணம் குறித்த விளக்கத்தையும் வழங்கினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அன்வார் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

– பெர்னாமா


Pengarang :