SELANGOR

சட்டவிரோத முதலீட்டு நடவடிக்கையில் இன்வெஸ்ட் சிலாங்கூர் ஈடுபடவில்லை

ஷா ஆலம், பிப் 7- தங்கள் நிறுவனம், நிறுவனத்தின் பெயர் மற்றும் அதன் தலைமை செயல்முறை அதிகாரி சம்பந்தப்பட்ட எந்த சட்டவிரோத முதலீட்டு நடவடிக்கையிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று இன்வெஸ்ட் சிலாங்கூர் பெர்ஹாட் நிறுவனம் தெளிவுடுத்தியுள்ளது.

போலியான கணக்குகளில் இயங்கும் டெலிகிராம் செயலி மற்றும் இதர சமூக ஊடகங்களில் இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் பெயர் பயன்படுத்தப்படுவது தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாக அது தெரிவித்தது.

இத்தகைய எந்தவொரு சமூக ஊடகங்களிலும் இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனமோ அல்லது அதன் துணை நிறுவனங்களோ ஈடுபடவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

ஆகவே, பொது மக்கள் விழிப்புடன் இருக்கும் அதே வேளையில் எந்தவொரு சட்டவிரோத நிதி முதலீட்டிலும் ஈடுபட வேண்டாம் என அது கேட்டுக் கொண்டது.

பொது மக்களைக் குழப்பும் நோக்கில் இத்தகைய சட்டவிரோத முதலீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் தரப்பினர் தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்டுத்துவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.


Pengarang :