SELANGOR

ஸ்கிம் மெஸ்ர உசிய எமாஸ் திட்டத்தில் பிப்ரவரியில் பிறந்த உறுப்பினர்களுக்கு ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் – பெர்மாதாங் மாநிலச் சட்டமன்றம்

ஷா ஆலம், பிப் 7: பெர்மாதாங் மாநிலச் சட்டமன்ற (DUN) ஸ்கீம் மஸ்ர உசிய எமாஸ் (SMUE) திட்டத்தில் பங்கேற்றப் பிப்ரவரியில் பிறந்த உறுப்பினர்கள் மாநிலச் சட்டமன்றச் சமூகச் சேவை மையத்தில் ஜோம் ஷாப்பிங் வவுச்சரைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தஞ்சோங் காராங்கில் உள்ள பெஸ்ட் ஃப்ரெஷ் மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் RM150 மதிப்பிலான வவுச்சரைப் பெற்றுக் கொண்டு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று பிரதிநிதி ரோசானா ஜைனல் அபிடின் கூறினார்.

“இதுவரை, ஜனவரியில் 939 வவுச்சர்கள் வழங்கப்பட்ட நிலையில், பிப்ரவரியில் 280 வவுச்சர்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளன.

“இந்த உதவி பெறுநர்களின் சுமையைக் குறைக்கும் மற்றும் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை மேலும் உற்சாகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்,” என அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஜோம் ஷாப்பிங் வவுச்சர் பெறுபவர்களுக்கான இந்த ஆண்டு முதல் குடும்ப வருமானத் தகுதி மாதத்திற்கு RM2,000 லிருந்து RM3,000 ஆக உயர்த்தப்படும் என்று மாநில அரசு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :