NATIONAL

கோல குபு பாரு தொகுதியில் வேட்பு மனுத்தாக்கலுடன் நாளை தொடங்குகிறது தேர்தல் பிரச்சாரம்

உலு சிலாங்கூர், ஏப் 26 – கோல குபு பாரு  தொகுதிக்கான இடைத்தேர்தல் இங்குள்ள உலு சிலாங்கூர் பல்நோக்கு மண்டபம் மற்றும் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நாளை  வேட்புமனுத் தாக்கல் நிகழ்வுடன் தொடங்குகிறது.

ஆர்முள்ள  வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய  காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னர் இடைத்தேர்தலில் போட்டியிட தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் அதிகாரி அறிவிப்பார்.

இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக இயக்கவாதியும் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான பாங் சாக் தவோ அறிவிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில்  பெரசத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி இடைக்காலத்  தலைவர் கைருல் அஸ்ஹாரி சவுட் களமிறக்கப்பட்டுள்ளார்.

நாளை வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும். மே 10ஆம் தேதி இரவு 11.59 மணி வரை 14 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை காலை கோலா குபு பாருவில் வானிலை தெளிவாக இருக்கும் என்றும் பிற்பகல் மற்றும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை தனது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. .


Pengarang :